அர்னால்டு, டாம் குரூஸை இணைய வைக்கும் ஷங்கர்?

அர்னால்டு, டாம் குரூஸை இணைய வைக்கும் ஷங்கர்?

செய்திகள் 15-Apr-2014 2:50 PM IST Top 10 கருத்துக்கள்

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஷங்கரின் ‘ஐ’ படமும் ஒன்று. இப்படம் ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் என ஷங்கர் டீம் சத்தியம் செய்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் நடைபெறவிருக்கும் இந்த ஆடியோ விழாவில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு கலந்து கொள்ள இருக்கிறார் என ஏற்கெனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விழாவைப் பற்றி மேலும் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் நம் விழிகளை விரியச் செய்கின்றன.

அதாவது, இந்த விழாவில் அர்னால்டு மட்டுமல்லாமல், ஹாலிவுட்டின் ‘ஹேன்ட்செம்’ நாயகன் டாம் குரூஸும் கலந்து கொள்ள இருக்கிறாராம். கூடவே முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இவ்விழாவில் இவர்களோடு கலந்து கொள்வார் என இன்னொரு சர்ப்ரைஸையும் அவிழ்த்துவிடுகிறார்கள். நமக்கு கிடைத்த தகவல்கள் உண்மையாகவிருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய சினிமா வரலாற்றில் ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழா அழுத்தமாக பதிவு செய்யப்படும் என்பது உறுதி.

ஏற்கெனவே கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தின் ஆடியோ விழாவிற்கு ஜாக்கிசானை அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஐ’ படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;