ஜூனில் ஆரம்பமாகும் சூர்யா படம்!

ஜூனில் ஆரம்பமாகும் சூர்யா படம்!

செய்திகள் 15-Apr-2014 12:18 PM IST Inian கருத்துக்கள்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘சிங்கம் 2’. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அந்தப் இப்படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான பூஜை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி ‘ஸ்டுடியோகிரீன்’ அலுவலகத்தில் நடைபெற்றது.

இப்படத்தை ‘பருத்திவீரன்’, ‘சிங்கம்’, ‘சிறுத்தை’, ‘பிரியாணி’ உட்பட பலவெற்றிப் படங்களை தயாரித்த கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ஸ்டுடியோ கிரீன் சார்பில் 11வது படமாக தயாரிக்கவுள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக ராஜீவனும் பணியாற்ற இருக்கின்றனர். கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வரும் ஜூன் மாதத்தில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறாரார் சூர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;