விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-கிருஷ்ணா!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-கிருஷ்ணா!

செய்திகள் 15-Apr-2014 11:33 AM IST Chandru கருத்துக்கள்

இரட்டையர்கள் சுபாவின் கைவண்ணத்தில் பிரபல வாரஇதழில் வெளிவந்து புகழ்பெற்ற ‘யட்சன்’ என்ற தொடர் படமாகவிருக்கிறது. இப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று (ஏப்ரல் 14) எளிமையாக நடைபெற்றது.

ஏற்கெனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இப்போது இப்படத்தில் மூன்றாவது முறையாக விஷ்ணுவர்தனின் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கிறார் ஆர்யா. அதோடு, விஷ்ணுவின் தம்பி கிருஷ்ணா அவரின் இயக்கத்தில் முதல்முறையாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வி ஐ பி 2 - மோஷன் போஸ்டர்


;