விஜய் - சிம்புதேவன் பட சர்ப்ரைஸ்!

விஜய் - சிம்புதேவன் பட சர்ப்ரைஸ்!

செய்திகள் 15-Apr-2014 11:22 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. இப்படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தில் யார் யார் இணையவிருக்கிறார்கள் தெரியுமா?

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். அதோடு நீண்டநாட்களுக்குப் பின்னர் இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்கிறாராம் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவி. விஜய் படத்தில் அவருக்கு எதிராக நின்று சண்டையிடும் வில்லன்கள் எப்போதும் ஸ்பெஷலாகவே இருப்பார்கள். இப்படத்தின் வில்லனும் ரொம்பவே ஸ்பெஷல்தானாம். அவர் வேறு யாருமல்ல ‘நான் ஈ’ புகழ் சுதீப்தான்! சிம்புதேவன் சொன்ன கதையில் ‘இம்ப்ரஸ்’ ஆன சுதீப் வில்லனாக நடிக்க உடனே சம்மதித்துவிட்டாராம். ஏற்கெனவே விஜய்யின் ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையவிருக்கிறாராம்.

மேற்படி தகவல்கள் அனைத்தும் நம்பத்தகுந்தவர்களிடமிருந்து நமக்கு கிடைத்தவை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;