மதம்பிடித்த யானையுடன் படப்பிடிப்பு!

மதம்பிடித்த யானையுடன் படப்பிடிப்பு!

செய்திகள் 15-Apr-2014 11:17 AM IST Inian கருத்துக்கள்

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்க ஜீவன் இயக்கிவரும் படம் ‘மொசக்குட்டி’. அறிமுக நாயகன் வீரா, பசுபதி, மதுமிதா, ‘சிசர்’ மனோகர் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் பற்றி இயக்குனர் ஜீவன் பேசியபோது..

‘‘கேரளா சொர்னூரில் 15 நாட்கள் ஷெட்யூல். அந்த பதினைந்து நாட்களில் பத்து நாட்களுக்கு தினமும் மூன்று யானைகள் தேவைப்பட்டன. கதைப்படி அந்த யானைகள் பசுபதிக்கு சொந்தமானது, யானைகளோடு அவர் நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக ஏராளமான வாழைப்பழத்தார் வரவழைக்கப்பட்டு பசுபதி கையாலேயே யானைக்கு கொடுத்து பழகி வந்தார். படப்பிடிப்பும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. நான்காவது நாள் இரண்டு யானை மட்டும் வந்திருந்தது. கன்டினியூட்டி இருப்பதால் கண்டிப்பாக மூன்று யானைகளும் வந்தால்தான் எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டேன். மூன்றாவதாக மற்றொரு யானையும் ஸ்பாட்டுக்கு வந்தது படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் காம்பிநேஷனில் மூன்று யானைகளையும் வைத்து நான் ஷாட் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று யானைப்பாகன்களும் ஒரு ஓரமாக நின்று, மூன்றாவதாக வந்த யானையை பார்ப்பது பசுபதியை பார்ப்பது, எங்களை பார்ப்பது இப்படியே மாறி மாறி... திகிலோடு பார்த்து மலையாளத்தில் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். எனது இணை இயக்குநர் கவியரசனுக்கு கொஞ்சம் மலையாளம் தெரியுமென்பதால் யானைப்பாகன்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டு அவர்கள் பேசியதை அரக்க பறக்க என்னிடம் வந்து சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு நெஞ்சு பகீரென்றது. மூன்றாவதாக வந்த யானை மதம் பிடித்த யானையாம்! அந்த யானைக்கு கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தார்களாம். சரியாகிவிட்டது என்று நினைத்து முதல் மூன்று நாட்கள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால் முற்றிலும் குணமாகவில்லை, நாங்களும் அது தெரியாமல் முன்று நாட்கள் அந்த யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

பசுபதி என்னிடம் வந்து, என்ன ரகசியமா பேசுறீங்க.. என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன்... மனுஷன் ஆடிப்போய்விட்டார், அவரிடம் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தேன்... என் உதவியாளர்கள் உட்பட யாருமே ஸ்பாட்டில் இல்லை. அதன்பிறகு அன்று பேக்கப் செய்துவிட்டோம். அடுத்த நாள் ஏர்ணாகுளத்தில் இருந்து இன்னொரு யானை வரவழைத்து மீதி ஷெட்யூலையும் முடித்துவிட்டு திரும்பினோம்... அதை இப்ப நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறது. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;