500 தியேட்டர்களில் விஷால் படம் ரிலீஸ்!

500 தியேட்டர்களில் விஷால் படம் ரிலீஸ்!

செய்திகள் 11-Apr-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

இன்று வெளியாகியுள்ள விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ரசிகர்களிளின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் தமிழகம் முழுக்க 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது! விஷால் நடித்து வெளிநாடுகளில் வெளியான படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியான படம் என்ற பெருமையும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு கிடைத்துள்ளது! அமெரிக்கா, அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இலங்கை உடபட பல வெளிநாடுகளிலாக இப்படம் 204 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ஆக, கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் வெளியாகியுள்ளை இப்படம் மூலம் விஷாலுக்கு மிகப் பெரிய கௌரவமும், வெற்றியும் கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;