விஜய் VS விஷால் : தீபாவளி ரேஸ்

விஜய் VS விஷால் : தீபாவளி ரேஸ்

செய்திகள் 11-Apr-2014 10:38 AM IST Chandru கருத்துக்கள்

தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாகும் என்பதால் பண்டிகை காலங்கள் வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதிலும், பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்... தியேட்டர்களில் திருவிழாதான்! இந்த வருடப் பொங்கலுக்கு ‘தல தளபதி’யின் வீரம், ஜில்லா படங்கள் இணைந்து வந்து ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்தது. இதேபோல் இந்த வருட தீபாவளிக்கும் ‘இளையதளபதி’ ரசிகர்களுக்கு ‘கத்தி’ படத்தின் மூலம் கொண்ட்டாட்டம் காத்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 40% முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விஜய் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவில் ‘செட்’ ஒன்றை அமைக்கவிருக்கிறார்களாம். தவிர, முதன்முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பாடல்களைக் கேட்க ஆவல் ஏற்பட்டுள்ளது. இப்படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிடப்படும் என முருகதாஸே அறிவித்திருப்பதால், தீபாவளி ரேஸில் ‘கத்தி’ கலந்துகொள்ளப்போவது உறுதி!

அதேபோல், படம் ஆரம்பிக்கப்பட்டபோதே 100 நாட்களில் ரிலீஸ் செய்யப்படும் என திட்டமிட்டு அறிவித்து, சொன்னபடி இன்று உலகமெங்கும் ரிலீஸாகிறது விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம். இதற்கடுத்து, ஹரி இயகத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு முன்பு விஷால், சூரியை வைத்து சுந்தர்ராமின் கைவண்ணத்தில் ஃபோட்டோஷூட் ஒன்றையும் நடத்தி, தற்போது படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் இயக்குனர் ஹரி. ‘பூஜை’ பட டீமும் ‘படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போகிறோம்’ என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆக.... இந்த வருட தீபாவளி ரேஸிற்கு விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய இரண்டு படங்களும் இப்போதே ‘நாமினேஷன்’ தாக்கல் செய்துவிட்டு, ரேஸிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;