அஜித் - கௌதம் மேனன் டீமில் யார் யார்?

அஜித் - கௌதம் மேனன் டீமில் யார் யார்?

செய்திகள் 11-Apr-2014 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்து வந்த அஜித் – கௌதம் மேனன் இணையும் படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததையொட்டி, படத்தின் படப்பிடிப்பும் துவங்கி விட்டது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்று கூறப்பட்டு வந்தாலும், படக்குழுவினர் தரப்பிலிருந்து அது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில் ரசிகர்களிடையே ஒரு குழப்பம் நிலவி வந்தது! ஆனால், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பது உறுதியாகிவிட்டது. பாடல்களை கவிஞர் தாமரை எழுதுகிறார். ஒளிப்பதிவை டான் மேக் கவனிக்க, ஆன்டனி எடிட்டிங் செய்கிறார்.

கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை, ஆன்டனி, ராஜீவன் ஆகியோர் இணைந்த ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;