வேளச்சேரியில் அதி நவீன சொகுசு தியேட்டர்கள்!

வேளச்சேரியில் அதி நவீன சொகுசு தியேட்டர்கள்!

செய்திகள் 10-Apr-2014 2:26 PM IST VRC கருத்துக்கள்

சென்னையின் மையப் பகுதியில் இயங்கி வரும் SPI சினிமா - சத்யம் தியேட்டர் குழுமத்தின் சார்பில், சென்னை பெரம்பூர், திருவான்மியூர் ஆகிய இடங்களிலும் தியேட்டர்கள் இயங்கி வருவது அனைவருக்கும் தெரியும்! இதன் தொடர்ச்சியாக சென்னை வேளச்சேரியிலுள்ள ஃபீனிக்ஸ் மாலிலும் ‘லக்ஸ்’ என்ற பெயரில் 11 ஸ்கிரீன்கள் கொண்ட தியேட்டரை அமைத்துள்ளது இந்த நிறுவனம். அதி நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டர்களில் மொத்தம் 2,688 இருக்கைகள் உள்ளதாம்! இந்த 11 தியேட்டர்களும் 4K டிஜிட்டல் எனும் தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய வகையில் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்! இந்த தியேட்டர் வளாகத்தில் உணவகம், ஸ்பா, கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், விளையாட்டு இடம் என பல வசதிகள் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டர் வளாகத்தை தொடர்ந்து இந்நிறுவனம் சென்னை, வடபழனியிலுள்ள ஃபாரம் மாலிலும் இது போன்ற அதிநவீன தியேட்டர்களை அமைத்து வருகிறது. இந்த தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;