மீண்டும் ‘சூது கவ்வும்’ கூட்டணி!

மீண்டும் ‘சூது கவ்வும்’ கூட்டணி!

செய்திகள் 10-Apr-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

‘சூது கவ்வும்’ படத்தை இயக்கி வெற்றி பெற்ற நலன் குமரசாமி அடுத்து இயக்கும் படம் ’எஸ்கிமோ காதல்’. இப்படம் க்ரைம், காமெடி என முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாகி வருகிறது. ‘சூது கவ்வும்’ படத்தை தயாரித்த ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் வேலைகளில் பிசியாகியுள்ள நலன் குமாரசாமி இந்தப் படத்தை முடித்ததும் தனது மூன்றாவது படமாக மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்! ‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு நலனும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணையும் இப்படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். விஜய் சேதுபதி நடித்து வரும் ‘புறம்போக்கு’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும், நலன் இயக்கும் ‘எஸ்கிமோ காதல்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;