தீவிரவாதிகள் ஊடுருவும் இடத்தில் படப்பிடிப்பு!

தீவிரவாதிகள் ஊடுருவும் இடத்தில் படப்பிடிப்பு!

செய்திகள் 10-Apr-2014 12:04 PM IST Inian கருத்துக்கள்

'ஜெகோவா ஃபிலிம் இன்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக ஜோசுவாதேவதாஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பஞ்சாயத்து’. இப்படத்தின் கதாநாயகனாக தேவன் நடிக்க, கதாநாயகியாக நேகா நடிக்கிறார். அருள்ராஜ்வர்மன் ஒளிப்பதிவு செய்ய இசையமைத்துள்ளவர் ஜான்சன். கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வி.கலைசங்கர். இப்படம் பற்றி இயக்குனர் கலைசங்கர் கூறும்போது,

‘‘இந்த படத்தில் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்றை இந்திய எல்லை பகுதியான குல்மார்க் என்ற இடத்தில் படமாகத் திட்டமிட்டோம். இந்தப்பகுதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவும் நுழைவு வாயில் பகுதியாகும். ஆனால் இயற்கை எழில் சூழ்ந்த அழகை வாரியிறைத்த அழகான பிரதேசப் பகுதியாகும். எனவே கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் படக்குழுவினருடன் சென்றோம். ஏற்கனவே பதட்டமான பகுதியான அந்த இடத்திற்கு நாங்கள் சென்ற நேரத்தில் தான் அப்சல் குருவை தூக்கில் போடபட்டார். இதனால் அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது. உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் திரும்பி வந்தோம்.

அதன் பிறகு நிலைமை சகஜ நிலைமைக்கு திரும்பியதும் படப்பிடிப்பை துவங்கினோம். அந்த இடத்தில படப்பிடிப்பை நடத்துவது என்று முடிவெடுத்து இரண்டு முறை போய் வந்ததில் நிறைய செலவு. இருந்தும் படப்பிடிப்பு நல்ல படியாக முடிந்தது. உயிரை பணயம் வைத்து, ‘ஒரு முறை சிறு பிழை.. தழுவுதே என் சுவாசமே’ என்ற பாடல் காட்சி சிறப்பாக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. கமர்ஷியல், காதல் படமாக ‘காதல் பஞ்சாயத்து’ உருவாகி உள்ளது’’ என்றார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி - மோஷன் போஸ்டர்


;