உண்மை கதையை படமாக்கும் ஜெய் ஆகாஷ்!

உண்மை கதையை படமாக்கும் ஜெய் ஆகாஷ்!

செய்திகள் 10-Apr-2014 12:01 PM IST Inian கருத்துக்கள்

'எம் .எம் .எம் கிரியேஷன்ஸ்' நிறுவனம் மற்றும் 'ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்' சார்பில் ஜெய் ஆகாஷ் தயரித்து, நடித்து, இயக்கும் படம் ‘காதலுக்கு கண்ணில்லை’. இப்படத்தில் ஜெய் ஆகாஷ் மாறுபட்ட இரு வேடங்களில் அப்பா - மகன் என நடித்துள்ளார். கதாநாயகிகளாக அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறும்போது, ‘‘ 17 வயது முதல் 45 வயது வரை வாழ்க்கையில் போராடும் ஒரு பெண்ணுடைய உண்மை கதையின் பிரதிபலிப்பு தான் இப்படம். காதல் வயப்பட்டு கெட்டவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படும் ஒருத்தி அவனால் சீரழிக்கப்படுகிறாள். பெண்ணை மையமாக வைத்து பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கும் விழிப்புணர்ச்சி படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, ஈ.சி.ஆர்., மகாபலிபுரம், ஹைதராபாத் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற இப்படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;