ராஜபக்சேவுடன் தொடர்பில்லை! – ‘கத்தி’ தயாரிப்பாளர்

ராஜபக்சேவுடன் தொடர்பில்லை! –  ‘கத்தி’ தயாரிப்பாளர்

செய்திகள் 10-Apr-2014 12:05 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக, அதிலும் குறிப்பாக விஜய் நடிக்கும் படம் என்றால் அந்தப் படம் சம்பந்தமாக ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்புகிறது! அதன் வரிசையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘கத்தி’ படமும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது! ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்' சார்பில் கருணாமூர்த்தி, ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபாஷ்கரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்றும், இந்தப் படத்தில் விஜய் நடிக்கக் கூடாது என்றும் சமீபத்தில் இணையதளங்கள் உட்பட பல மீடியாக்களில் தகவல்கள் பரவின!

இது தொடர்பாக ’ஐங்கரன்’ கருணாமூர்த்தி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

‘’நானும் சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையை விட்டு வெளியேறியவர்கள். 27 வருடங்களாக நான் சினிமா தொழில் செய்து வருகிறேன். ‘லைகா ’சுபாஷ்கரன் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்த தமிழர். அவருக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 30 வருடங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறிய சுபாஷ்கரன், கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது பூர்வீக பூமியை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன். ஏற்கெனவே, ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ - ‘ஞானம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் கரு.பழனியப்பன் இயக்கத்தில், சேரன் கதாநாயகனாக நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர் தமிழ் சினிமாவுக்கு புதியவரல்ல! இப்போது சுபாஷ்கரன், ‘கத்தி’ படத்தை என்னுடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை வருகிற தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;