விக்ரமின் போலி ஐடி ரெய்டு!

விக்ரமின் போலி ஐடி ரெய்டு!

செய்திகள் 10-Apr-2014 10:52 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது பிஸியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், விக்ரம் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதுதான் அவரது ரசிகர்களின் ‘மில்லியன் டாலர்’ கேள்வி? ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தாலும், இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், விக்ரம் அடுத்ததாக ஒரு ஹிந்திப்பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என அவரின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அக்ஷய்குமார், காஜல் அகர்வால், அனுபம் கேர் ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஒரு வருடத்திற்கு முன்பே பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையகப்படுத்தியுள்ளது. தற்போது, ‘ஐ’ பட வேலைகள் முடிவடைந்து விக்ரம் ஓய்வாக இருப்பதால், இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க அவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதேபோல், ‘ஸ்பெஷல் 26’ படத்தில் அனுபம் கேர் நடித்த கேரக்டரில் நடிப்பதற்கு சத்யராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள்? கதாநாயகி, டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்களோடு கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள்.

சிபிஐ ஆபிஸர் போல் போலியாக நடிக்கும் அக்ஷய் குமார், அனுபம் கேர் டீம் போலி ஐடி ரெய்டுகளை நடத்தி கொள்ளையடிப்பதுதான் இந்த ‘ஸ்பெஷல் 26’ ஹிந்திப் படத்தின் கதை. ஏற்கெனவே ‘கந்தசாமி’ படத்தில் ஒரிஜினல் சிபிஐ ஆபிஸராக வரும் விக்ரம் ரெய்டுகளை நடத்தி, அந்தப் பணத்தை ஏழை மக்களுக்கு செலவிடும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;