ஒரே நேரத்தில் 3 படங்களில் உதயநிதி!

Udhayanidhi Same time in 3 movies

செய்திகள் 10-Apr-2014 12:05 PM IST VRC கருத்துக்கள்

‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ‘நண்பேன்டா’ படத்தில் பிசியாகி விட்டார்! இந்தப் படத்தில் உதயநிதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தை இயக்குனர் எம்.ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்திலும், ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.அர்.பிரபாகரன் இயக்கத்திலும் ஒவ்வொரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஹமத் இயக்கும் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் படங்களின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்! உதயநிதி ஸ்டாலின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை! எஸ்.அர். பிரபாகரன் இயக்கும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனுடன் பேசியிருக்கிறார்கள்! அனேகமாக இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக லட்சுமி மேனனே நடிப்பார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ


;