‘சிவப்பு’ படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

‘சிவப்பு’ படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

செய்திகள் 10-Apr-2014 10:09 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி நடித்த ‘பொல்லாதவன்’, ‘சிவப்பு சூரியன்’, சிவாஜி நடித்த ‘அந்தமான் காதலி’, கமல் நடித்த ‘நாயகன்’ உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தவர்கள் முக்தா.வி.சீனிவாசன், முக்தா.வி.ராமசாமி ஆகியோர். முக்தா.வி.ராமசாமியின் மகனும் தற்போது நவீன்சந்திரா, ரூபாமஞ்சரி நடிக்க சத்யசிவா இயக்கத்தில் உருவான ‘சிவப்பு’ படத்தின் தயாரிப்பாளருமான முக்தா.ஆர்.கோவிந்த் (வயது 53) உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (9-4-2014) மாலை மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு பிரியதர்ஷினி கோவிந்த் என்ற மனைவி உள்ளார். இவர் பிரபல கலாசேத்ரா நடன கல்லூரியின் முதல்வர் ஆவார். அவர் இத்தாலியில் இருப்பதால் அவர் வந்த பிறகு வெள்ளிக்கிழமை (11.04.2014) அன்று காலை ராயப்பேட்டை மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. முக்தா. ஆர்.கோவிந்த் அவர்களின் உடல், இறுதி அஞ்சலிக்காக 1, ஜெகதாம்பாள்தெரு, ராயப்பேட்டை, சென்னை-&14ல் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;