உறுதிசெய்யப்பட்டது ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதி!

உறுதிசெய்யப்பட்டது ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதி!

செய்திகள் 9-Apr-2014 7:51 PM IST Chandru கருத்துக்கள்

இதுவரை அதிகாரப்பூர்வமாக ‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்படாமலேயே ’இதோ வருது... அதோ வருது’ என மீடியாக்களே ஆளாளுக்கு ஒரு தேதியை எழுதித் தள்ளிக் கொண்டிருந்தன. இந்நிலையில் படம் வருகிற மே 1ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது உறுதி என அனைவரும் நேற்றிலிருந்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீர் திருப்பமாக படத்தை மே 9ஆம் தேதி வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது 100% உறுதிபடுத்தப்பட்ட செய்தி எனவும், வரும் சனிக்கிழமை ரிலீஸ் தேதியோடு கூடிய பேப்பர் விளம்பரங்கள் வெளிவரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கின்றன. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன் படத்தை குழந்தைகளோடு கண்டுகளித்து கொண்டாடத் தயாராகுங்கள் ரசிகர்களே..!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 மேக்கிங் - வீடியோ


;