தமிழ் புத்தாண்டில் பிரகாஷ்ராஜின் சமையல்!

தமிழ் புத்தாண்டில் பிரகாஷ்ராஜின் சமையல்!

செய்திகள் 9-Apr-2014 3:31 PM IST VRC கருத்துக்கள்

ரீ-மேக் வரிசையில் தயாராகிக் கொண்டிருக்கும் இன்னொரு படம் ‘உன் சமையலறையில்’. மலையாள ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீ-மேக் ஆன இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்! இளையராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் (மே) ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ள பிரகாஷ் ராஜ், இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘உலவச்சாரு பிரியாணி’யின் ஆடியோவை கடந்த உகாதி பண்டிகையன்று (தெலுங்கு வருட பிறப்பு) ஹைதராபாத்தில் வெளியிட்டார்! இதனை தொடர்ந்து இப்போது தமிழ் பதிப்பின் ஆடியோவை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்! பிரகாஷ் ராஜ் இயக்கி, தயாரித்து, நடித்து வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிப்பவர் சினேகா என்பது எல்லோருக்கும் தெரியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;