ஜெய்க்கு ஜோடியானார் ஆன்ட்ரியா!

ஜெய்க்கு ஜோடியானார் ஆன்ட்ரியா!

செய்திகள் 9-Apr-2014 3:06 PM IST VRC கருத்துக்கள்

'ராஜா ராணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் கைவசம் இப்போது நிறைய படங்கள்! ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘வடகறி’, ‘அர்ஜுனன் காதலி’ என பல படங்களில் நடிக்கும் ஜெய், அடுத்து ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்! பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது! ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அஞ்சலி, ‘ராஜா ராணி’யில் நயன்தாரா என பெரிய நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜெய்க்கு, சரவணன் இயக்கும் புதிய படத்தில் ஆன்ட்ரியா ஜோடியாகியிருக்கிறார். ஜெய் – ஆன்ட்ரியா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;