மோதிக்கொள்ளும் குறும்பட இயக்குனர்கள்!

மோதிக்கொள்ளும் குறும்பட இயக்குனர்கள்!

செய்திகள் 9-Apr-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

குறும்பட இயக்குனரான பாலாஜி மோகன் தனது இரண்டாவது படைப்பாக இயக்கியுள்ள படம் ‘வாயை மூடி பேசவும்’. இப்படம் ஏப்ரல் 25 அன்று ரிலீசாக, அதே நாளில் இன்னொரு குறும்பட இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படைப்பாக இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’வும் ரிலீசாகிறது! தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகியுள்ள ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் துல்கர் சல்மான் - நஸ்ரியா ஜோடி என்றால், ‘ஜிகர்தண்டா’வில் சித்தார்த் - லட்சுமி மேனன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளனர்! பாலாஜி மோகன் முதன் முதலாக இயக்கிய ‘காதலில் சொதப்புவது எப்படி’ படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’ படமும் ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்பதால், ‘வாயை மூடி பேசவும்’, ‘ஜிகர்தண்டா’ படங்கள் மீதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது! ஒரே தினம் வெளியாகும் இப்படங்களில் எந்தப் படத்திற்கு ரசிகர்களின் அதிக ஆதரவு கிடைக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;