லக்ஷ்மிராயின் ‘ஸ்லிம்’ ரகசியம்!

லக்ஷ்மிராயின் ‘ஸ்லிம்’ ரகசியம்!

செய்திகள் 9-Apr-2014 10:54 AM IST Chandru கருத்துக்கள்

‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ படங்களைத் தொடர்ந்து லக்ஷ்மிராய் நடிப்பில் தமிழில் வெளிவந்த கடைசிப்படம் ‘ஒன்பதுல குரு’. தனக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் லக்ஷ்மி ராய், தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் இயக்கி வரும் ‘இரும்புக்குதிரை’ படத்தில் அதர்வா, ப்ரியா ஆன்ந்த் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

லக்ஷ்மிராய் என்றாலே ரசிகர்களுக்கு உடனே ஞாபகம் வருவது அவரது நெடுநெடு உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும்தான். ஆனால், இந்த ‘இரும்புக்குதிரை’ படத்தின் கேரக்டருக்காக தன் உடல் எடையில் கிட்டத்தட்ட 15 கிலோ வரை குறைக்க வேண்டி இருந்ததாம். கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்த லக்ஷ்மிராய் கடுமையான உடற்பயிற்சி, டயட் ஆகியவற்றால் உடல் மெலிந்து ‘ஸ்லிம்’ ராயாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தாராம். அவரின் தோற்றத்தைப் பார்த்த யூனிட் ஆட்கள் ‘யார் இந்த புதிய நடிகை’ என விசாரிக்க அம்மணிக்கு சந்தோஷத்தில் மிதப்பதுபோல் இருந்ததாம். தன் புதிய தோற்றத்திற்கு செட்டில் கிடைத்த இந்த வரவேற்பு, ரசிகர்களிடத்திலும் கிடைக்கும் என சந்தோஷமாக எல்லோரிடத்திலும் கூறிவருகிறாராம் லக்ஷ்மி ராய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;