25-ஆம் தேதி பயணத்தைத் துவங்கும் சிம்பு – த்ரிஷா!

25-ஆம் தேதி பயணத்தைத் துவங்கும் சிம்பு – த்ரிஷா!

செய்திகள் 9-Apr-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு – த்ரிஷாவின் கெமிஸ்ட்ரியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது! அதே ஜோடி மீண்டும் இணைந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்கள் அல்லவா! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது! செல்வராகவனுடன் மீண்டும் இணைந்துள்ள யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்யும் விதமாக பக்கா ஒரு ஸ்கிரிப்ட்டுடன் களம் இறங்குகிறாராம் செல்வராகவன்! இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் செல்வராகவன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;