‘உலக சூப்பர்ஸ்டாரை’ முந்திய ரஜினிகாந்த்!

‘உலக சூப்பர்ஸ்டாரை’ முந்திய ரஜினிகாந்த்!

செய்திகள் 9-Apr-2014 10:08 AM IST Chandru கருத்துக்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள சினிமா ரசிகர்களிடம் ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்று கேட்டால் அத்தனை பேரும் ரஜினியை நோக்கி கையை நீட்டுவார்கள். இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர்ஸ்டார் இருக்கிறார். அவர்... குட்டி சுட்டீஸ்களின் ஃபேவரைட் ஆக்டர் ஜாக்கி சான்! இவர் படம் வெளிவரும்போது மட்டுமே உலக முழுக்க இருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட உலக சூப்பர்ஸ்டாரின் சாதனையையே நம்ம ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் தற்போது முறியடிக்கப்போகிறார்.

ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டதுபோல், உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமும், ‘தல’யின் பிறந்தநாளுமான மே 1ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் வெளியாகவிருப்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளிவரும். இந்நிலையில், இப்படம் இதுவரை எந்த தென்னிந்திய மொழிப் படமும் ரிலீஸாகாத அளவில் சுமார் 3850 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஜாக்கிசான் படம் ரிலீஸாகும் எண்ணிக்கையைவிட மிக அதிகம் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ், இந்தி, பஞ்சாபி, தெலுங்கு உட்பட 9 மொழிகளில் வெளிவருகிறதாம் இந்தியாவில் ‘மோஷன் கேப்சர் டெக்னாலஜி’யில் உருவாக்கப்பட்ட முதல் அனிமேஷன் 3டி படமான ‘கோச்சடையான்’.

பல சாதனைகளோடு வெளிவரவிருக்கும் ‘கோச்சடையான்’ வசூலிலும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;