ரஜினிக்கு ஜோடியாகும் சோனாக்‌ஷி சின்ஹா!

ரஜினிக்கு ஜோடியாகும் சோனாக்‌ஷி சின்ஹா!

செய்திகள் 8-Apr-2014 3:04 PM IST VRC கருத்துக்கள்

’கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு விடையாக, அடுத்து ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது! இப்படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாக இருப்பதாகவும், இப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு, ‘முத்து, ‘படையப்பா’ படங்களில் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;