ஹாலிவுட் பாணியில் விஜய்யின் ‘கத்தி’!

ஹாலிவுட் பாணியில் விஜய்யின் ‘கத்தி’!

செய்திகள் 8-Apr-2014 12:29 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தைப் பற்றி வெளிவரும் அடுத்தடுத்த செய்திகளால் நாளுக்கு நாள் பரபரப்பு ஏறிக்கொண்டே போகிறது. மும்பை, ஹைதராபாத், சென்னை என பறந்து பறந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் ‘க்ளைமேக்ஸ்’ சண்டைக்காட்சிக்காக மிகப்பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்த செட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுபோல் ஒரு செட்டுக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வார்கள் என படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் வாய் பிளக்கிறார்களாம். இந்த பிரம்மாண்ட செட்டில் ஹீரோ விஜய்யும், வில்லன் நீல் நிதின் முகேஷும் சண்டையிடும் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம்.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;