அஜித் – கௌதம் படம் : வெளிவராத தகவல்கள்!

அஜித் – கௌதம் படம் : வெளிவராத தகவல்கள்!

செய்திகள் 8-Apr-2014 10:58 AM IST Top 10 கருத்துக்கள்

’ஸ்ரீசத்ய சாய் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அஜித், கௌதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை (9-ஆம் தேதி) துவங்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இப்படத்திற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீடு அருகே (வளசரவாக்கம்) இருக்கும் சாய்பாபா கோயிலில் 10-ஆம் தேதி சிறப்பு பூஜை ஒன்று நடைபெறவிருக்கிறதாம்! இந்த சிறப்பு பூஜையில் அஜித் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சென்னை ஈ.சி.ஆர்.பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது! இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் ‘மிருகம்’ புகழ் ஆதியும் நடிக்கவிருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கௌதம் மேனனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்றும், அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;