இயக்குனர் விஜய் – அமலாபால் திருமணம்

இயக்குனர் விஜய் – அமலாபால் திருமணம்

செய்திகள் 8-Apr-2014 10:15 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனரானவர் விஜய். தொடர்ந்து விக்ரம், விஜய் படங்களை இயக்கியவர், தற்போது ‘சைவம்’ படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். ‘தெய்வத்திருமகள்’ படத்தை இயக்கியபோது அதில் நடித்த அமலாபாலுக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று விஜய்க்கும் அமலாபாலுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜூன் 12-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அமலாபால் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விஜய் தற்போது அமெரிக்கா (படம் சம்பந்தமாக) சென்றிருப்பதால் அவர் சென்னை திரும்பியவுடன் இது குறித்து இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;