தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை வெளியிடும் ஐங்கரன்!

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை வெளியிடும் ஐங்கரன்!

செய்திகள் 7-Apr-2014 4:51 PM IST VRC கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள ‘கத்தி’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ள இந்நிறுவனம் ‘கத்தி’ படத்தை தயாரித்து வருவதோடு தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ ஆகிய படங்களின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, வேல் ராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தை ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் இயக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தையும் தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனமே தயாரிக்கிறது. ஒரே நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியுள்ள ‘ஐங்கரன்’ நிறுவனம் தொடர்ந்து பல பிரம்மாண்ட படங்களை தயாரிக்க இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;