கோலிவுட்டின் ராசியான நடிகை!

கோலிவுட்டின் ராசியான நடிகை!

செய்திகள் 7-Apr-2014 2:46 PM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் வினயன் இயக்கி, தயாரித்த ‘ரகுவின்டே சொந்தம் ரசியா’ மலையாள படம் மூலமாக சினிமாவுலகில் அடியெடுத்து வைத்தவர் லக்‌ஷ்மி மேனன். சசிகுமாருடன் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். லக்‌ஷ்மி மேனன் நடித்த முதல் தமிழ்ப் படமே பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, விக்ரம் பிரபுவுடன் ‘கும்கி’, சசிகுமாருடன் ‘குட்டிப்புலி’, விஷாலுடன் ‘பாண்டியநாடு’ என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் லக்‌ஷ்மி மேனன்.

மேலும் விஷாலுடன் விரைவில் வெளிவரவிருக்கும் ‘நான் கிகப்பு மனிதன்’, விமலுடன் ‘மஞ்சப்பை’, கௌதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’, சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா’, விஜய் சேதுபதியுடன் ‘வசந்தகுமாரன்’ என பல படங்களை கையில் வைத்திருக்கும் லக்‌ஷ்மி மேனன் கோலிவுட்டின் ராசியான நடிகைகள் பட்டியலில் சேர்ந்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;