விஜய் நடிக்க ஆசைப்பட்ட படம்!

விஜய் நடிக்க ஆசைப்பட்ட படம்!

செய்திகள் 7-Apr-2014 2:46 PM IST Inian கருத்துக்கள்

ரஜினி நடித்த ‘நான் அடிமை இல்லை’, ‘அடுத்த வாரிசு’ உட்பட பல படங்களை தயாரித்த பிரபல நடிகர் துவாரகீஷின் ‘துவாரகீஷ் சித்ரா’ பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் 'ஹலோ பாஸ்'. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘விஷ்ணுவர்தனா’ படமே இது. இந்தப் படத்தை பொன்குமரன் இயக்க, சுதீப், ப்ரியாமணி, பாவனா ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்த, ‘சாருலதா’ படத்திற்கு முன்பு பொன்குமரன் இயக்கிய முதல் படம் இதுதான்.

வசூலில் சூப்பர் ஹிட் மற்றும் பல விருதுகளையும், சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்று தந்த இப்படம் விரைவில் தமிழில் வெளியாகவுள்ளது. படம் பற்றி இயக்குனர் பொன்குமரன் கூறியபோது,

‘‘சாதாரண ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிகப்பெரிய தாதா ஒருவனுடன் மோதும் அதிரடி ஆக்ஷன் படம் இது. சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த படம் வெளியானபோது படத்தை பார்த்த விஜய் தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த அளவிற்கு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இருக்கும்’’ என்கிறார் பொன்குமரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;