இவர்களுக்கும் இன்று இனிய நாள்!

இவர்களுக்கும் இன்று இனிய நாள்!

செய்திகள் 7-Apr-2014 12:43 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சசி தனது ’பூ’ படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகை பார்வதி மேனன்! இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கிய பார்வதிக்கு நடிப்பில் பெயர் சொல்லும்படியாக அமைந்த மற்றொரு படம் தனுஷ், பரத்பாலா கூட்டணி அமைத்த ‘மரியான்’. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தில் ஜெயராம் மகளாக நடித்து வருகிறார் பார்வதி மேனன்! எண்ணிக்கையில குறைவான படங்களிலே நடித்தாலும், தரமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற கொள்கையோடு செலக்டீவ் ஆக நடித்து வரும் பார்வதிக்கு இன்று ஸ்பெஷல் டே! அதாவது பார்வதி மேனன் பிறந்த நாள் இன்று! இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதோடு, இன்று பிறந்த நாள் காணும் கோலிவுட்டின் மற்றொரு நட்சத்திரமான கோவை சரளாவுக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;