’மீகாமன்’ படத்தில் ஆர்யாவின் புதிய கெட்-அப்!

Arya's New Get Up

செய்திகள் 7-Apr-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

ஆர்யா நடித்து வரும் படங்கள் ’மீகாமன்’ மற்றும் ‘புறம்போக்கு’. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இப்போது நடந்து வர, மகிழ் திருமேனி இயக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் நடிக்கிறார்களாம்! ஏற்கெனவே பல ஹீரோக்கள் திருடன் போன்ற கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ’மீகாமன்’ படத்தில் ஆர்யா அதுபோன்ற ஒரு திருடன் கேரக்டரில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா எதற்காக திருடுகிறார் என்பது கதையில் சஸ்பென்ஸ்!

இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த ‘நேமிசந்த் ஜபக் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்‌ஷன், த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்க, சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;