விஜய் சேதுபதி பட சர்ப்ரைஸ்!

Mellisai Vijay Sethupathi's Surprise

செய்திகள் 7-Apr-2014 11:22 AM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ’மெல்லிசை’யும் குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துவிட்டதாம்! இந்தப் படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் குறிப்பிடும்போது, ‘’முதலில் இந்தப் படத்தின் கதையை கேட்ட விஜய்சேதி கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது, ஆனால் நான் ஏற்கெனவே கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு தான் இப்படத்தில் நடிக்க முடியும், அதற்கு ஒரு வருடம் ஆகும், வெய்ட் பண்ணுங்க என்று கூறியிருந்தார்! இப்படி கூறியவர் இரண்டு மாதங்களுக்கு முன் என்னைக் கூப்பிட்டு, என்னோட ஒரு படத்தோட ஷூட்டிங் தள்ளிப் போகிற மாதிரி இருக்கு, அதனால நாம் ‘மெல்லிசை’யை துவங்கலாமா என்று கேட்டு எனக்கு சர்ப்ரைஸ் தந்தார்! உடனே நானும் சுறுசுறுப்பாகி இப்போது படத்தின் 80 சதவிகித வேலைகளை முடித்து விட்டேன்! படத்தை ஜூலை மாத வெளியீடாக கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்! ‘மெல்லிசை’யில் விஜய்சேதுபதிக்குஜோடியாக, வயலின் கற்றுத்தருபவராக காயத்ரி நடிக்க, சாம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;