‘சைவம்’ எனது கதையல்ல! - விஜய்

Saivam Audio Launch Event

செய்திகள் 7-Apr-2014 10:51 AM IST Inian கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்க, நாசரின் மகன் லுப்துபுதின் பாஷா அறிமுகமாகும் படம் ‘சைவம்’. இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்ற சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கலந்துகொண்டு ‘சைவம்’ படத்தின் ட்ரைலரை வெளியிட, அனுஷ்காவும், அமலாபாலும் இணைந்து பெற்றுக்கொண்டனர். சித்தார்த், விஜய்சேதுபதி ஒரு பாடலையும், சமுத்திரக்கனி 'ஜெயம்' ரவி ஒரு பாடலையும் வெளியிட திரையில் பாடல் திரையிடப்பட்டது. சாரா பாடுவதுபோல் நடித்த பாடல் பெரிய வரவேற்பு பெற்றது.

‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியாசமான முறையில் அனைவரையும் கவரும் வகையில், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற ஆட்டங்களுடன் கிளி ஜோசியம், வளையல் கடை, பிளாஸ்டிக் விளையாட்டு பொருள் விற்கும் கடைகள் என ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழாவை நேரில் காண்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது.

நாசரின் மகன் லுப்துபுதீன் பாஷா, இந்தப் படத்தில் அறிமுகமாவதால் நண்பர்களும், உறவினர்களும் திரண்டு வந்திருந்தனர். அனுஷ்கா இந்த விழாவிற்காகவே ஹைதராபாத்திலிருந்து வந்திருந்தார். சித்தார்த், விஜய்சேதுபதி, பார்த்திபன், ’ஜெயம்’ ரவி, சமுத்திரக்கனி, எடிட்டர் மோகன், ‘லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ முரளிதரன், ‘பிரமிட்’ நடராஜன், கே.ராஜன், ‘யுடிவி’ தனஞ்செயன் மற்றும் இயக்குநர்கள் வசந்த், பாலாஜி மோகன், ஆர்.சுந்தர்ராஜன், கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரமன், கானா பாலா, சுஜா ரகுராம், ஜனனி ஐயர், அமலா பால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, பொன்வண்ணன் அவரது மனைவி மற்றும் மகள்களுடன் குடும்பம் சகிதமாக பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர்.

விழாவில் இயக்குனர் விஜய் பேசும்போது,

‘‘சைவம்’ படத்தின் கதை என்னுடைய அம்மா சொன்ன கதையாகும். என்னுடைய கதை இல்லை. நான் சிறு வயதில் ‘சைவம்’ சாப்பிடமாட்டேன். என்னை எவ்வளவோ மிரட்டினாலும் சாப்பிட மாட்டேனாம். ஒரு காலகட்டத்திற்கு பிறகு சைவம் சாப்பிட ஆரம்பித்துள்ளேன். இந்த சம்பவத்தை என்னுடைய அம்மா கூறிய போது தான் அவர்கள் சொன்ன விதத்தில் ஒரு திரைக்கதை இருப்பதை உணர்ந்தேன். அதையே கொஞ்சம் மாற்றி சினிமாவிற்கு தகுந்த மாதிரி சுவாரஸ்யமாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன். சாராவும், நாசரும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;