‘சாகசம்’ படைக்கட்டும் பிரசாந்த்!

Happy Birthday Prashanth

செய்திகள் 5-Apr-2014 5:19 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ’டாப் ஸ்டார்’ என்றும், ’காதல் இளவரசன்’ என்றும் அழைக்கப்பட்டவர் பிரசாந்த்! மணிரத்னம், ஷங்கர், பாலுமகேந்திரா போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர் பிரசாந்த்! சமீபகாலத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிகளை தராவிட்டாலும், இப்படங்கள் பிரசாந்தின் நடிப்புக்கு பெயர் சொல்லும்படியான படங்களாக அமைந்திருந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து படு உற்சாகமாக, ஒரு புது கெட்-அப்புடன் பிரசாந்த் தோன்றி நடித்து வரும் படம் ‘சாகசம்’. இப்படத்தை மிகப் பெரிய ஒரு வெற்றிப் படமாக தரவேண்டும் என்ற முனைப்போடு கடுமையாக உழைத்து வரும் பிரசாந்த் பிறந்த நாள் ஏப்ரல்-6 (நாளை)! ’சாகசம்’ படத்தின் மூலம் சினிமாவில் சாகசம் படைக்கவிருக்கும் பிரசாந்துக்கு ‘டாப் 10 சினிமா’ தனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;