ஏப்ரல் 10-ல் வடகறி!

Vadacurry audio launch Date

செய்திகள் 5-Apr-2014 4:04 PM IST VRC கருத்துக்கள்

‘மீகா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கும் படம் ’வடகறி’. ஜெய், ஸ்வாதி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரபல கவர்ச்சிப் புயல் சன்னி லியோனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சரவணன் ராஜன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் இசை அமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 10 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. உலக புகழ்பெற்ற சன்னி லியோன் நடிக்கும் முதல் தமிழ் படம் ‘வடகறி’ என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;