‘இந்தியா பாகிஸ்தானி’ல் விஜய் ஆன்டனி!

Vijay Antony New Movie

செய்திகள் 5-Apr-2014 10:03 AM IST VRC கருத்துக்கள்

‘சலீம்’, ‘திருடன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி, அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘இந்தியா பாகிஸ்தான்’ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். ’விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ சார்பில் ஃபாத்திமா விஜய் ஆன்டனி’ வழங்கும் இப்படத்தினை ஆனந் இயக்குகிறார். ‘டாஸ் போட்டாச்சி’ என்ற வாசகத்துடன் இந்தப் படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘டாஸ் போட்டாச்சி’ கேப்ஷன் மற்றும் விஜய் ஆன்டனியின் கெட்-அப்பை பார்க்கும்போது இப்படம் கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் படம்போல் தெரிகிறது!
சரி பாஸ், ‘சலீம்’, ’திருடன்’ படங்கள் என்னாச்சு?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;