மலையாள படங்களுக்கு வழிவிடும் விஷால்!

மலையாள படங்களுக்கு வழிவிடும் விஷால்!

செய்திகள் 4-Apr-2014 4:37 PM IST VRC கருத்துக்கள்

விஷால் தயாரித்து, நடித்த ‘பாண்டியநாடு’ படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது. இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 11-ஆம் தேதி ரிலீசாகிறது. உலகம் முழுக்க 11-ஆம் தேதி ரிலீசாகும் இப்படம் கேரளாவில் மட்டும் ஒரு வாரம் தள்ளி ரிலீசாகிறது. இதற்கு காரணம் மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை ஏப்ரல் 15-ஆம் தேதி வருகிறது. இதையொட்டி மம்முட்டி நடித்த ‘கேங்ஸடர்’, திலீப் நடித்த ‘ரிங் மாஸ்டர்’, பிருத்திவிராஜ் நடித்த ‘செவந்த் டே’ போன்ற பல படங்கள் வெளியாவதால் அப்படங்களுக்கு வழிவிட்டு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ஒரு வாரம் தள்ளி, அதாவது 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் கேரள ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூல் செய்திருப்பதால், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;