சந்தானம் படத்தில் இணையும் ஷங்கர் – ராஜமௌலி!

சந்தானம் படத்தில் இணையும் ஷங்கர் – ராஜமௌலி!

செய்திகள் 4-Apr-2014 1:00 PM IST Krishna கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஸ்ரீநாத் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷா சவேரி நடிக்க, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மரியாதை ராமண்ணா’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற தமிழ் புத்தாண்டு தினமான 14-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது! இப்படத்தின் ஆடியோவை ’ஐ’ பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கர் மற்றும் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனரும், ‘மரியாதை ராமண்ணா’ படத்தை இயக்கிய ராஜமௌலியும் இணைந்து வெளியிட இருக்கிறார்கள்! ஆடியோ வெளியீட்டு விழாவை தொடர்ந்து மே 9-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;