ஹேப்பி பர்த்டே ஷாம்!

Happy Birthday Shaam

செய்திகள் 4-Apr-2014 11:10 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவா, தான் இயக்கிய ‘12பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய நடிகர் ஷாம்! இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ மற்றும் ‘உள்ளம் கேட்குமே’, ’தில்லாலங்கடி’ உட்பட பல படங்களில் நடித்தார் ஷாம்! இவர் நடிப்பில் சமீபத்தில் திரைகு வந்த படம் ’6 மெழுகுவர்த்திகள்’. இப்படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் தோன்றி சிறப்பான நடிப்பை வழங்கிய ஷாமுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுதந்தது என்று சொல்லலாம்! இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு’ படத்தில் நடித்து வரும் ஷாமுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் ஷாமுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியன் - டீசர்


;