பெரிய நகரங்களை குறி வைக்கும் விஜய்யின் கத்தி!

Kathi Next Shooting Place

செய்திகள் 4-Apr-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து சென்னையிலும் ஒரு ஷெட்யூல் நடந்தது. இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் முகாமிட்டு தற்போது படப்பிடிப்பை நடத்தி வரும் முருகதாஸ், அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்கவிருக்கிறார். வருகிற 7 ஆம் தேதி முதல் துவங்விருக்கும் இந்தப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடைபெறுமாம்! கொல்கத்தா சென்னை, ஹைதராபாத் என பெரிய நகரங்களை குறி வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் முடிந்து விட்டதாம்! விஜய் படத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கும் அனிருத், விஜய்யுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் சமந்தா என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;