பிந்துமாதவி மகிழ்ச்சி..!

பிந்துமாதவி மகிழ்ச்சி..!

செய்திகள் 3-Apr-2014 12:07 PM IST Inian கருத்துக்கள்

நானியுடன் சேர்ந்து 'பிள்ள ஜமீந்தார்' உட்பட பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த நாயகி பிந்துமாதவி. 'கழுகு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இவர் அருள்நிதியுடன் ஜோடிசேர்ந்து நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.

சிம்புதேவன் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சியான, மறக்க முடியாத அனுபவமாக இருப்பதாகவும், மேலும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருவதுடன் ஜாலியான கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமையும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் பிந்துமாதவி!

இப்போது விஷ்ணுவுடன் ஒரு படத்திலும், நகுலுடன் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிந்து மாதவி. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'தேசிங்குராஜா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என தொடர் வெற்றிப் படங்களில் நடித்த இவரின் அடுத்தப் படமான 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படமும் வெற்றிபெற்றால் சந்தோஷமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;