மைக்கேல் ஜாக்சன் கெட்-அப்பில் கானா பாலா!

Gana Bala

செய்திகள் 3-Apr-2014 11:08 AM IST Top 10 கருத்துக்கள்

'யவராஸ் இன்டர்நேஷனல்' சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், 'குட் டைம் ஃபிலிம்
என்டர்டெய்ன்மென்ட்’ சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபா ராணி ஆகியோர்
இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’.

இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஸ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கதை எழுதி இயக்கி வருகிறார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய ‘அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு...’ என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்-அப்பில் ஆடிப் பாடி நடித்தும் இருக்கிறார். ‘‘தொடர்ந்து ‘கானா’ பாடலகளை பாடி, நடித்தும் வரும் கானா பாலாவின் இந்தப் பாடலும் ஹிட் ஆகும்’’ என்கிறார் படத்தின் இசை அமைப்பளர் நித்யன் கார்த்திக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;