தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Sudden Plan For the Producer

செய்திகள் 3-Apr-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தயாரிப்பாளர் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ ரவீந்திரன் சந்திரசேகர்! ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிப்பதான அறிவிப்புகளோடு சினிமாவில் களம் இறங்கிய இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’சுட்டகதை’. இவரது தயாரிப்பில், ‘திரு திரு துறு துறு’ படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி இயக்கத்தில் ‘கொலை நோக்கு பார்வை’ என்ற படம் தயாரிப்பில் இருந்து வந்தது. இதற்காக கிட்டத்தட்ட 43 லட்சம் ரூபாய் வரை செலவும் செய்யப்பட்டுள்ளதாம்! ஆனால் இப்போது தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இப்படத்தை கைவிடப்படுவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;