‘ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் முத்தம் தரவில்லை! - விஷால்

‘ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் முத்தம் தரவில்லை! - விஷால்

செய்திகள் 3-Apr-2014 10:19 AM IST Inian கருத்துக்கள்

‘யுடிவி’ நிறுவனமும், விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன். இப்படம் வருகிற 11-ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு விஷால், லக்‌ஷ்மி மேனன், ‘யுடிவி’ தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதன் விவரம் பின்வருமாறு.

‘வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளதால் தான் யு/ஏ தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டதா?’ என்று ’யுடிவி’ தனஞ்செயனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது,
‘‘வன்முறைக் காட்சிகளுக்காக இல்லை, தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு போக உள்ளதால் எந்த காட்சி என்று குறிப்பிட்டு எங்களால் சொல்ல முடியாது. தணிக்கைக் குழுவினர் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழுக்காக சில காட்சிகள் நீக்கினால் படத்தின் சாரம்சம் பாதிக்கப்படும் என்றும் படத்தை குறித்து பாராட்டும் தெரிவித்தனர். ‘யு’ சான்றிதழ் கிடைத்தால் வியாபாரத்திற்கு உதவும் வகையில் இருக்கும். ‘யு’ கிடைக்கவில்லை என்றாலும் படத்தை அப்படியே வெளியிடுவோம்’’ என்றார்.

விஷால் பேசும்போது, ‘‘படத்தில் இரண்டு சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கின்றன. ஒன்று நீருக்கடியில் நானும் லக்‌ஷ்மி மேனனும் நடித்தது! இன்னொன்று முத்தக் காட்சி! முத்தக் காட்சி என்றவுடன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஃப்ரெஞ்சு கிஸ் மாதிரி இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இது கதைக்கு தேவைப்படுகிற முத்தக் காட்சி’’ என்று விஷால் தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டார்!

‘‘ஷூட்டிங் இருந்ததால் இங்கு வருவதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது, சாரி’’ என்று சொன்ன படியே வந்த லக்‌ஷ்மி மேனனிடம் சில கேள்விகள் தொடுக்கப்பட்டது. முதல் கேள்வியே முத்தம் பற்றித்தான்.

‘இனிவரும் படங்களிலும் உதட்டுடன் உதடு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?’ என கேட்டபோது,

‘‘கதைக்கு தேவைப்பட்டால், உண்மையாக தேவைப்படும் பட்சத்தில் நடிப்பேன். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்தக் காட்சியில் நடித்தேன்.
விஷாலுடன் மட்டும்தான் உதட்டுடன் உதடு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?
சற்று தயங்கியபடியே, ‘‘அப்படியில்லை. முன்னரே சொன்னபடி கதைக்குத் தேவைப்படும் பட்சத்தில் நடிப்பேன்’’ என்றார்.

இப்படத்தின் இயக்குனர் திரு, மற்றும் படத்தில் நடித்த இனியா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக ‘யுடிவி’ தனஞ்செயன் அனைவரையும் வரவேற்று பேசினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;