15 வயதில் தாயாகும் பாமா!

Bama Coming Soon

செய்திகள் 2-Apr-2014 4:53 PM IST VRC கருத்துக்கள்

’எல்லாம் அவன் செயல்’, ‘சேவற்கொடி’ படங்களில் நடித்த பாமா தற்போது நடித்து வரும் படம் ’ராமானுஜன்’. பிரபல கணித மேதை ராமனுஜனின் வாழ்க்கை வரலாறை சொல்லும் இப்படத்தை ஞானராஜசேகரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராமானுஜனின் மனைவியாக நடிக்கும் பாமா, ‘ஒற்றமந்தாரம்’ என்ற மலையாள படத்தில் துணிச்சல் மிக்க மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதாவது, பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குழந்தைக்கு தாய் ஆகும் 15 வயது மாணவியின் கேரக்டரில்! இப்படத்தின் கதைபடி பாமாவின் அக்காவுக்கு குழந்தை பாக்யம் கிடையாது! அதனால் அக்காவுக்காக அவர் புருஷனில் இருந்து கர்பம் தரித்து குழந்தையை பெற்று தரும் இளம் பெண்ணின் கேரக்டர்! ஆந்திராவில் நடந்த ஒரு நிஜ சம்பவமாம் இந்தக் கதைக்குப் பின்னணி! ஏற்கெனவே மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ள வினோத் மங்கரா இயக்கும் படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராமானுஜன் மேக்கிங்


;