இசைக்குடும்பத்தின் முப்பெரும் விழா!

Illayaraja's Musical Treat

செய்திகள் 2-Apr-2014 1:17 PM IST Top 10 கருத்துக்கள்

சினிமாவுக்கு நிறைய திறமைசாலிகளை தந்த ஊர் மதுரை! அந்த மதுரையில் இசைஞானி பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று வருகிற 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா வழங்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ராஜாவின் சங்கீதத்திருநாள்’ என்று பெயர் வைத்துள்ளனர். மதுரையிலுள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ராஜாவின் லைவ் ஆர்கெஸ்ட்ராவில் பிரபல பின்னணி பாடகர்களான ஹரிஹரன், மனோ, சித்ரா, சாதனா சர்கம், ஹரிசரண், விஜய் பிரகாஷ், ஷாலினி, அனிதா உட்பட பலபேர் கலந்துகொண்டு பாடி மதுரை மாநகரை இசையால் குளிர்விக்கவிருக்கின்றனர்! இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கவிருக்கிறார்.

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’ துவக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’புக்கு தலைமையேற்று தொடர்ந்து அதை செயல்படுத்தவிருப்பவர் இளையராஜாவின் மகளும், இசை அமைப்பாளரும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி! இளையராஜாவுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவருக்காக இதுவரை அதிகாரபூர்வமாக ரசிகர் மன்றங்களோ, ஃபேன்ஸ் கிளப்-களோ செயல்பட்டதில்லை என்பதும் சமீபத்தில்தான் இளையராஜா, ஃபேஸ்புக்கில் தனக்கான அதிகாரபூர்வமான கணக்கைத் துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் மற்றொரு ஸ்பெஷலாக கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ திரைப்படத்தின் ஆடியோவையும் வெளியிடுகிறார் இசைஞானி! ஆக, இளையராஜா குடும்பத்தினர் மொத்தமாக கலந்துகொள்ளும் இந்த இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு செமத்தியான ஒரு விருந்தாக அமையப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;