மீண்டும் காமெடியனாக நடிப்பேன்! - வடிவேலு

Vadivelu Act Again For Comedian

செய்திகள் 2-Apr-2014 10:32 AM IST Inian கருத்துக்கள்

'ஏஜிஎஸ்' நிறுவனம் தயாரித்து, யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள படம் ‘தெனாலிராமன்’. இப்படத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாக்‌ஷி தீக்‌ஷித் நடித்திருக்கிறார். சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ’ஏஜிஎஸ்’ நிறுவன அதிபர் கல்பாத்தி அகோரம் ஆடியோவை வெளியிட, ‘தெனாலிராமன்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் வடிவேலு பேசியதாவது,
‘‘ஏன்டா இது உனக்கு தேவையான்னு.. நினைச்சு தான பார்க்குறீங்க? இது நான் எடுத்த முடிவல்ல! காலத்தின் கட்டாயம்! இந்த இரண்டரை வருட இடைவெளியில் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா நான் தான் தவிர்த்து வந்தேன். மலையாளம், தெலுங்கு படங்களிலும் வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் நடித்தால் வடிவேலு கதை தமிழ்ல முடிஞ்சு போச்சு, அது தான் அங்கே போய்விட்டார் என சொல்வார்கள். நான் நடிக்காமல் இருந்தபோது நிறைய பேர் எனக்கு ஃபோன் செய்து விசாரிப்பார்கள். நான் நடிக்காம்ல் இருந்தாலும் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்துள்ளேன்! அவர்களுடைய ரேஷன் கார்டில் எனது பெயர் இல்லையே தவிர அவர்கள் மனதில் இருந்துள்ளேன்.

திரும்பவும் நடித்தால் ஒரு ‘கிங்’ மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டுமென்று நினைத்தேன் அதற்கேற்றார் போல அமைந்தது இந்த ‘தெனாலிராமன்’ படம். தெனாலிராமன் கதைகளை நான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும்போது வடிவேலு வேண்டாம் என்று நிறைய பேர் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் கேட்கவில்லை. நான் அங்கே (அரசியல்) போய் என்ன பண்ணினேன் காமெடிதான் பண்ணினேன். நான் பண்ணியவற்றை தான் இப்போ (அரசியல்) வெளியிலே பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
விடிய விடிய இந்தப் படத்தில் நடித்துள்ளோம். இப்படம் மூலம், வேலையிலாத பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு வேலை கிடைத்துள்ளது. இசை கலைஞர்களுக்கும் இதன் மூலம் வேலை கிடைத்துள்ளது. இமான் பாடல்கள் நன்றாக இருக்கிறது.

பொதுவா படம் தயாரிப்பவர்களை தயாரிபாளர் என்றே அழைப்பேன். ஆனால் கல்பாத்தி அகோரம் அவர்களை முதலாளி என்று தான் அழைப்பேன். ஷூட்டிங் செட்டை பிரித்தால் படமே நின்று விட்டது என்பார்கள்! கதாநாயகிக்காக மும்பையிலிருந்து அழைத்து வந்தால் இங்கேயிருப்பவர்கள் வடிவேலுவுடன் நடித்தால் அவ்வளவு தான், உன்னை மற்றவர்கள் யாரும் கூப்பிட மாட்டார்கள் என அனுப்பிவிடுவார்கள். இப்படி பலரை அனுப்பிவிட்டார்கள்.
யாருடைய பேச்சும் கேட்காமல் நடிக்க சம்மத்திதுள்ளார் மீனாக்‌ஷி தீக்ஷித். அவருடைய நிறம் தக்காளி போல இருக்கிறது. நான் தார் மாதிரி இருக்கிறேன். நாங்கள் இருவரும் அருகிலிருந்தால் தக்காளியில் தார் ஊற்றிய மாதிரி இருக்கிறது.

நான் கதாநாயகனாக நடித்தாலும் எல்லா கதாநாயகர்களுடனும் நடிப்பேன். நான் தொடர்ந்து நடிக்க ரசிகர்கள் தைரியம் கொடுக்க வேண்டும்’’ என்றார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;