ஹிட் கூட்டணியின் அடுத்த ஆல்பம்!

Director Vijay's Next Move

செய்திகள் 2-Apr-2014 11:43 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் ‘தலைவா’ படத்தை இயக்கிய விஜய் அடுத்த படைப்பு ‘சைவம்’. விஜய் இயக்கிய ‘தெயவத்திருமகள்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் நாசர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய்யின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க, விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்! படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. மாறுபட்ட கதைகளத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் இயக்குனர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;