அஜித் பிறந்த நாளில் கோச்சடையான்?

Kochadaiiyaan Release Date

செய்திகள் 1-Apr-2014 5:32 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ‘கோச்சடையான்’ ஹிந்தி படத்தின் டிரைலரும் நேற்று மும்பையில் வெளியானது! தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை இந்திய திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது! இப்படம் ஏற்கெனவே பல தேதிகளில் ரிலீஸ் ஆவதாக எதிர்பார்க்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் படம் ரிலீஸாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது!

இப்போது ‘கோச்சடையான்’ படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் வேலைகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்! லேட்டஸ்ட் தகவலின்படி இப்படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறது ‘கோச்சடையான்’ டீம் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;